Tuesday, April 19, 2011

கொங்கர் வீரம்

வேல் பட்டாக்கத்திகளோடு எழுமாத்தூர் அண்ணமார் சுவாமிகள்

சங்க காலம்:
கொங்கர் செங்களம், ஒளிறுவாள் கொங்கர், கருங்கைக் கொங்கர் எனப்பலவாறு கொங்கர் வீரம் சங்க இலக்கியங்களால் புகழப்படுகிறது.

கருவூர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ஆகியோரே தமிழ் தேசங்கள் ஐந்தினுள்ளும் முதன்மையாக பாரத வர்ஷத்தை திக் விஜயம் செய்து ஆண்டவர்கள்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்: http://www.tamilvu.org/library/l1240/html/l1240man.htm

சேரன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரம்): http://www.tamilvu.org/library/l3100/html/l3100028.htm

கொங்கர்தம் வீரத்தை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

பிற்காலம்:
  • களப்பாளர் என்ற வடுக - ஒரியர்களை அடக்கி வென்று மூவேந்தர்களையும் நாடாள வைத்தது கொங்கப்படை
  • சிங்களத்தின் லங்காபுரி தண்டநாதன் மூவேந்தர்களையும் சிறையிலிட்டபொழுது அவனை முறியடித்து துரத்தியது கொங்கப்படை
  • இன்றும் மலையாளத்தில் பாலக்காட்டருகே சித்தூரில் "கொங்கப்படை" என்ற விழா பகவதி கோயிலில் நடைபெறுகிறது. கொங்கரை வெற்றிகொள்ள இயலாததால் மலையாளிகளுக்காக பகவதியே வந்து போரிட்டு கொங்கரை வென்றதாக கதை.
http://www.kerala.in/index.php?page=desti&type=list&destiid=96&pname=About%20Chittur%20Konganpada
http://www.youtube.com/results?search_query=konganpada&aq=f

சமீபகாலம்:
தீரன் தீர்த்தகிரி சர்க்கரை (சின்னமலை) உந்துதலால் கொங்கப்படை மழவல்லி போரில் வெள்ளையருக்குத் தண்ணீர் காட்டியது. மேலும் 1840 வரை வெள்ளையர்களுக்குச் சிம்மசொப்பனமாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் ஆயுத சாலைகளும், மல்யுத்த சாலைகளும், போர்பட்டரைகளும் இருந்துள்ளன.

வெள்ளையர்கள் இதனை ஒடுக்க ஆயுதப்பறிப்புச் சட்டம், உப்பு வரிமூலம் வெடியுப்பு காய்ச்சுதல் நிறுத்தம், சூழ்ச்சிகள், துரோகங்கள், பேடி பாடங்கள் மூலம் தற்பொழுது கொங்கர்களை பேடிகளாக்கியுள்ளனர். இதன்மூலம் கொங்கர்களை கொத்தடிமைகளாக்கியுள்ளனர்.






No comments:

Post a Comment