Tuesday, April 19, 2011

கொங்கர் வீரம்

வேல் பட்டாக்கத்திகளோடு எழுமாத்தூர் அண்ணமார் சுவாமிகள்

சங்க காலம்:
கொங்கர் செங்களம், ஒளிறுவாள் கொங்கர், கருங்கைக் கொங்கர் எனப்பலவாறு கொங்கர் வீரம் சங்க இலக்கியங்களால் புகழப்படுகிறது.

கருவூர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ஆகியோரே தமிழ் தேசங்கள் ஐந்தினுள்ளும் முதன்மையாக பாரத வர்ஷத்தை திக் விஜயம் செய்து ஆண்டவர்கள்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்: http://www.tamilvu.org/library/l1240/html/l1240man.htm

சேரன் செங்குட்டுவன் (சிலப்பதிகாரம்): http://www.tamilvu.org/library/l3100/html/l3100028.htm

கொங்கர்தம் வீரத்தை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

பிற்காலம்:
  • களப்பாளர் என்ற வடுக - ஒரியர்களை அடக்கி வென்று மூவேந்தர்களையும் நாடாள வைத்தது கொங்கப்படை
  • சிங்களத்தின் லங்காபுரி தண்டநாதன் மூவேந்தர்களையும் சிறையிலிட்டபொழுது அவனை முறியடித்து துரத்தியது கொங்கப்படை
  • இன்றும் மலையாளத்தில் பாலக்காட்டருகே சித்தூரில் "கொங்கப்படை" என்ற விழா பகவதி கோயிலில் நடைபெறுகிறது. கொங்கரை வெற்றிகொள்ள இயலாததால் மலையாளிகளுக்காக பகவதியே வந்து போரிட்டு கொங்கரை வென்றதாக கதை.
http://www.kerala.in/index.php?page=desti&type=list&destiid=96&pname=About%20Chittur%20Konganpada
http://www.youtube.com/results?search_query=konganpada&aq=f

சமீபகாலம்:
தீரன் தீர்த்தகிரி சர்க்கரை (சின்னமலை) உந்துதலால் கொங்கப்படை மழவல்லி போரில் வெள்ளையருக்குத் தண்ணீர் காட்டியது. மேலும் 1840 வரை வெள்ளையர்களுக்குச் சிம்மசொப்பனமாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் ஆயுத சாலைகளும், மல்யுத்த சாலைகளும், போர்பட்டரைகளும் இருந்துள்ளன.

வெள்ளையர்கள் இதனை ஒடுக்க ஆயுதப்பறிப்புச் சட்டம், உப்பு வரிமூலம் வெடியுப்பு காய்ச்சுதல் நிறுத்தம், சூழ்ச்சிகள், துரோகங்கள், பேடி பாடங்கள் மூலம் தற்பொழுது கொங்கர்களை பேடிகளாக்கியுள்ளனர். இதன்மூலம் கொங்கர்களை கொத்தடிமைகளாக்கியுள்ளனர்.


கொங்கதேச ஆயுதங்கள் - நாட்டுத்துப்பாக்கி

நெறயப்பேரு துவாக்கின்னாவே வெள்ளக்காரங் கொணாந்ததுன்னு நெனைக்கறாங்க. ஆனா உப்பிலியர்களுக்குச் சாரமண்ணிலிருந்து வெடியுப்பு (salt petre) காய்ச்சறதுதாம் முக்கியமான தொழில்ங்றத மறக்கப்படாது. துலுக்கன் பாரத வர்ஷத்துக்குள்ள நொழையறப்பவே இது இருந்துதாமா. பேடிகள்ன்ட ஆயுதமுன்னு சொல்லுவாங்கொ. வெள்ளக்காரன் லைசன்சுன்னு கொணாந்து துவாக்கியைம்மு, உப்பு வரின்னு கொணாந்து உப்பிலியஞ் சீவனத்தைமு அழிச்சுப்புட்டான்.
வெடியுப்புக் குடுவை. 

கொங்கதேச ஆயுதங்கள் - கட்டாரி

Another weapon to be cautious with. Used for harvesting opponent's மஞ்சாசோறு!!
இது  கொங்கத்தில் நம்ப பிரசித்தி.

கொங்கதேச ஆயுதங்கள் - கைத்தடி

தடிவரிசைக்கான ஆயுதம் - மூங்கிலை வாட்டி தயாரிக்கப்படுகிறது.My dear கைத்தடி!! அதன்மேல் அடித்திருக்கும் கோடுகளைக் கவனிக்கவும். பர்கூர் மலைப்பிரம்பு நம்ம areaல famous!

Another  thing - my favorite ஆயுதம். Simple but lethal. கொங்கத்தின் ஒவ்வொரு ஊரிலும் தடிவரிசைக்கூடங்கள் இருந்துள்ளன. நம்ப வாத்தியாரிடம் soft. அவர் வாத்தியார் வெளுத்து எடுத்துருவாராம். எல்லாத்துக்கும் மேல....பழனி மொட்டையாண்டியின் ஆயுதம்...தண்ட ஆயுத பாணி!

பழனி தண்டாயுதபாணி

கொங்கதேச ஆயுதங்கள் - சொட்டைமுனை

மான்கொம்புகளிலிருந்து செய்யப்படும் இவ்வாயுதம் அஜாக்கிரதையாக இருந்தால் பிரயோகிப்பவருக்கும் தீமை பயக்கும்.


ஓடாநில்லி (ஓடாநிலை) சொட்டைமுனை


கொங்கதேச ஆயுதங்கள் - வாள்

ஒளிறுவாள் கொங்கர் - (பதிற்றுப்பத்து 383)ஓடாநில்லியில் (ஓடாநிலை) கிடைத்த வாட்கள். கொங்கர் அவர்தம் வாட்களே  எகிப்து பிரமிடுகளிலும் உள்ளன என்பது மற்றொரு விஷயம்.

சுருள் பட்டா:
மிகவும் தேர்ந்தவர்கள் பிரயோகிப்பது. ஏமாந்தால் வீசியவர் தலையையே உருட்டிவிடும்.


சுருள் பட்டாக்கள்